குக் வித் கோமாளியில் இருந்து திடீர்னு விலகிய நாஞ்சில் விஜயன்.. அவருக்கு பதிலாக களமிறங்கும் வில்லி நடிகை!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில் இருந்து நாஞ்சில் விஜயன் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக வில்லி நடிகையை களமிறக்கி உள்ளனர்.
மக்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகளை கொடுக்ககூடிய தொலைக்காட்சி விஜய் டிவி. சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், நீயா நானா என்று விஜய் டிவி தனது நிகழ்ச்சிகளை பல வருடங்களாக மக்களுக்கு வெகுவாக கொண்டு சேர்த்து வருகிறது. அந்த வகையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து இருந்த நிலையில் ஐந்தாவது சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பிருந்தே சர்ச்சைகள் தொடங்கிவிட்டது. இந்த நிகழ்ச்சியில் நான்கு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் தான் வெளியேறப் போகிறேன் என்று திடீரென்று அறிவித்திருந்தார்.
அது குறித்த காரணத்தை அவர் சொல்லவில்லை என்றாலும் விரைவில் புது நிகழ்ச்சியில் நான் உங்களை சந்திக்கிறேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் வெங்கடேஷ் பட் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் இயக்குனர், தயாரிப்பாளர் என்று எல்லோருமே அடுத்தடுத்து விலகிக் கொண்டிருந்தனர். இதனால் ஐந்தாவது சீசன் தொடங்கப்படுமா? இல்லையா? என்ற கேள்விகள் இருந்து வந்த நிலையில் இப்போது புதிய நடுவராக மாதம்பட்டி ரங்கராஜன் இணைந்து இருக்கிறார்.
அதோடு பல புதிய கோமாளிகள் மற்றும் குக்குகளும் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இன்று திடீரென்று நாஞ்சில் விஜயன், “நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப் போகிறேன். எனக்கு விஜய் டிவியோடு எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனால் பாக்ஸ் ஆபீஸ் கம்பெனி தயாரிக்கும் எந்த நிகழ்ச்சியிலும் நான் இனி கலந்து கொள்ள மாட்டேன். இத்தனை நாட்களும் சப்போர்ட் செய்ததற்கு நன்றி மக்களே!” என்று கூறியிருக்கிறார்.
இது அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. இந்நிலையில், நாஞ்சில் விஜயனுக்கு பதிலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புது கோமாளியாக நடிகை ஃபரீனா அசாத் களமிறங்கி உள்ளார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.