‘என் முழு உலகம்’.. இன்ஸ்டாவில் பதிவிட்ட இலியானா.. வைரலான புகைப்படம்

 
ileana

கணவர் மைக்கேல் டோலன் மீது மகன் கோவா சாய்ந்துகிடக்கும் புகைப்படத்தை இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

2006-ல் வெளியான ‘தேவதாசு’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் இலியானா. அதே ஆண்டு ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘நண்பன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் இலியானா. இவர் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

ileana

சமீப காலமாக, பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் இலியானா, சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதனையடுத்து கர்ப்பத்துக்கு காரணம் யார் என்று ரசிகர்கள் கேள்விகள் எழுப்பி வந்தனர்.

பின்னர் கர்ப்பத்துக்கு காரணம் இவர்தான் என்று சொல்லி வெளிநாட்டைச் சேர்ந்த மைக்கேல் டோலன் புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்தார். பின்னர் இலியானாவும் மைக்கேல் டோலனும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கோவா என்று பெயரிட்டுள்ளனர்.

Ileana

இந்நிலையில், கணவர் மைக்கேல் டோலன் மீது மகன் கோவா சாய்ந்துகிடக்கும் புகைப்படத்தை இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதனுடன், ‘என் முழு உலகம்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது.

From around the web