முத்துவேல் பாண்டியனின் என்ட்ரி... ரிலீஸ் தேதியுடன் வெளியானது ஜெயிலர் பட அப்டேட்!

 
Jailer

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘பீஸ்ட்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து ‘ஜெயிலர்’ படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் இந்தப் படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Jailer

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முத்துவேல் பாண்டியன் என்ற வேடத்தில் ரஜினி நடித்து வருகிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இந்த படம், கதை விவாதம் உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் நான்கு மாதங்களுக்கு மேல் நடைபெற்று வந்ததையடுத்து கடந்த 2022 ஆகஸ்ட் 22-ம் தேதி படப்பிடிப்பு துவங்கியது. 

சென்னை, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் எண்ணூர் ஆகியப் பகுதிகளில் நடந்து வருகிறது. இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த நிலையில் இன்று அசத்தலான அப்டேட்டை தயாரிப்புக்குழு வெளியிட்டுள்ளது.


இந்த நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி 'ஜெயிலர்' திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. சுதந்திர தின விடுமுறையையொட்டி படம் வெளியாகிறது.

From around the web