மலையாளதில் களமிறங்கும் இசையமைப்பாளர் அனிருத்.. யார் டைரக்டர் தெரியுமா?

 
Tyson

பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டைசன்’ மலையாள படத்தில் இசையமைக்க கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2011-ல் தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அனிருத். அதன்பின் ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தொடர்ந்து ‘விடாமுயற்சி’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். பாலிவுட்டிலும் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான ‘ஜவான்’ படம் மூலம் என்ட்ரி கொடுத்து சிறப்பான இசையமைப்பாளராக தன்னை அங்கும் நிலை நிறுத்தியுள்ளார்.

Anirudh

தெலுங்கிலும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் ‘தேவரா’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இதுவரை மலையாளப் படங்களுக்கு இசையமைக்காமல் இருந்த அனிருத், தற்போது ‘டைசன்’ மலையாள படத்தில் இசையமைக்க கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக பிரேமம், சேஷம் மைக்கேல் பாத்திமா ஆகிய படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.

இந்த நிலையில், பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு அவர் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்தப் படத்தின்மூலம் முரளி கோபி, பிரித்விராஜுடன் 3வது முறையாக இணைந்துள்ளார். முன்னதாக லூசிபர் உள்ளிட்ட படங்களில் இந்தக் கூட்டணி மாஸ் காட்டியது. பிரித்விராஜின் இயக்கத்தில் உருவாகும் 4வது படமான டைசன் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் இணைந்துள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. தமழில் ஜெயிலர், கேப்டன் மில்லர் படங்களில் நடித்து மாஸ் காட்டிய சிவராஜ்குமார், மலையாளத்தில் நடிக்கவுள்ளது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

From around the web