பிரபல இசையமைப்பாளர் கே.ஜி.ஜெயன் மரணம்.. பிரபலங்கள் இரங்கல்

 
KG Jayan

பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான கே.ஜி.ஜெயன் காலமானார். அவருக்கு வயது 89.

1934-ம் ஆண்டு கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் பிறந்த கே.ஜி.ஜெயன், கேரளாவில் பிரபல ஜெயா - விஜயா இரட்டையர்களில் ஒருவர். மிக இளம் வயதிலேயே இசைத் துறையில் நுழைந்த ஜெயன், விஜயன் சகோதரர்கள் கர்நாடக இசையில் சிறந்து விளங்கினர். இந்த கூட்டணியின் பக்திப் பாடல்கள் மிகவும் பிரபலமானவை. சபரிமலை ஐயப்பன் கோவில் தினமும் திறக்கப்படும்போது கே.ஜி.ஜெயன் பாடிய ‘ஸ்ரீகோவில் நடை துறன்னு’ பாடல் ஒலிக்கப்படுவது வழக்கம்.

கடந்த 69 வருடங்களாக இசை உலகில் தொடர்ந்து பணியாற்றி வந்த ஜெயனின் 90-வது பிறந்தநாள் விழா கடந்த ஆண்டு நடைபெற்றது. இசையையே தனது வாழ்க்கையாகக் கொண்ட ஜெயன், கர்நாடக இசை உலகில் மட்டுமின்றி, திரைப்படப் பாடல்கள், பக்திப் பாடல்கள் என அனைத்திலும் தனக்கே உரித்தான பாணியில் ரசிகர்களை வசீகரித்திருந்தார். 

KG Jayan

சுவாதி திருநாள் சங்கீத அகாடமியில் இருந்து ஞானபூஷணம் தேர்ச்சி பெற்றார். செம்பை வைத்தியநாத பாகவதர் போன்ற கர்நாடக ஜாம்பவான்களிடம் 18 வருடங்களும், டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவிடம் 6 வருடங்களும் பயிற்சி பெற்றார். 1988-ல் தனது இரட்டை சகோதரர் கே.ஜி.விஜயனின் அகால மரணம் ஜெயனை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது, ஆனால் ஐயப்பப் பாடல்கள் மூலம் தனது சோகத்தில் இருந்து மீண்டார். 

ஜெயனுக்கு பத்மஸ்ரீ விருதும், திருவிதாங்கூர் தேவசம் போர்டு அவரது ஐயப்ப பாடல்களுக்காக ஹரிவராசனம் விருதும் வழங்கி கௌரவித்தது. சங்கீத நாடக அகாடமி விருதையும் பெற்றுள்ளார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களை கே.ஜி.ஜெயன் உருவாக்கியுள்ளார். பிரபல மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயன் இவரின் மகன் ஆவார்.

RIP

89 வயதான கே.ஜி.ஜெயன் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று (ஏப்.16) காலமானார். அவரது மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web