ஆர்யா - சரத்குமார் - கௌதம் கார்த்திக் நடிப்பில் மிஸ்டர் எக்ஸ்!!
Feb 22, 2025, 11:14 IST

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாருடன் முதன் முதலாக இணைகிறார் ஆர்யா. உடன் கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியார் இணைந்து நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகிறது. அனாகா, அதுல்யா ரவி ஆகியோருடன் மேலும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
சிங்கம், லப்பர் பந்து படங்களை தயாரித்த ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ல்ஷ்மன்குமார், வினித் ஜெயின் தயாரித்துள்ளனர். இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இணைத் தயாரிப்பாளராக உள்ளார். மனு ஆனந்த் எழுதி இயக்கியிருக்கிறார்.