நாட்டின் பெருமைக்குரிய மகள்களை சிறையில் அடைத்துவிட்டு புதிய அரசர் மோடி மகுடம் சூட்டியிருக்கிறார்... நடிகர் கிஷோர் விமர்சனம்

 
Kishore

நாட்டின் பெருமைக்குரிய மகள்களை சிறையில் அடைத்து மகுடம் சூட்டிக்கொள்ளும் ‘ராஜா’ என பிரதமர் மோடியை நடிகர் கிஷோர் கூறியுள்ளார்.

2004-ல் வெளியான ‘கன்டி’ படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானவர் கிஷோர். அதனைத் தொடர்ந்து ஆகாஷ், ராக்‌ஷஷா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 2007-ல் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின், ஜெயம் கொண்டான், சிலம்பாட்டம், வெண்ணிலா கபடி குழு, தோரனை, முத்திரை, ஆடுகளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழா நடைபெற்ற நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்கள் புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்லத் தொடங்கினர். அவர்களை தடுத்து நிறுத்திய டெல்லி காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்தது.

Kishore

இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் கிஷோர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், “ஹிஜாபுவும் குஸ்தி வீரர்களும்” என்ற தலைப்பில் அவர் தனது கருத்தைப் பகிர்ந்து உள்ளார்.நாட்டின் பெருமைக்குரிய மகள்களை சிறையில் அடைத்துவிட்டு மகுடம் சூட்டும் மன்னர் நரேந்திர மோடிக்கு பராக் பராக் என்று கூறியுள்ளார்.

எந்த ஒரு இஸ்லாமிய பெண்ணும் ஹிஜாபை எதிர்க்க முடியாது. ஆணின் மேலாதிக்கத்தின் சின்னம். மனுதாரரின் ஹிஜாப் தடை, ஒரு சுதந்திரமான, படித்த மற்றும் அதிகாரம் பெற்ற பெண்ணாக மாறுவதைத் தடுத்து, ஒரே கல்லில் இரண்டு பறவைகளைக் கொன்றது.

ஒரு பெண் படித்தால் அவளுக்கு அடுத்த தலைமுறை முழுவதும் கல்வி கற்கும். அரசாங்கப் புள்ளி விவரங்களின்படி இன்றும் இந்தியாவில் நூற்றுக்கு பதினான்கு முஸ்லிம் பெண்களே கல்லூரிக் கல்வி கற்க முடிகிறது.

A post shared by Kishore Kumar Huli (@actorkishore)

குடும்பம், உறவினர், மதம், பாரம்பரியம் அனைத்தையும் கடந்து கடைசி கட்டத்தில் கல்வி பறிக்க அவளே காரணம் ஆகிவிட்டால்?? முஸ்லீம் பெண் மற்றும் இனம் இரண்டும் நாட்டின் பிரதான நீரோட்டத்திற்கு வெளியே உள்ளன என கூறி உள்ளார்.

மேலும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஜந்தர் மந்தரில் நடக்கும் போராட்டம் நடத்தும் சிறுமிகள், பலாத்காரம் செய்பவரின் திமிர், சிறுமிகள் மீது அடிக்கடி தங்கள் அதிகாரத்தை காட்டும் போலீஸ். பலாத்காரம் செய்பவர்களை மறைமுகமாக ஆதரிக்கும் பிரதமரின் ஒற்றையாட்சி அரசு. 
இதுமட்டுமின்றி, உலகத்தின் உச்சத்துக்கு வர பல நூற்றாண்டுகளாகப் போராடியவர்களி நான்கு சுவர் குழிக்குள் மீண்டும் தள்ளுகிறார்கள். ஜெய் பாரத் மாதா என் கூறி உள்ளார்.

From around the web