மீண்டும் முதல்வராவார் மு.க.ஸ்டாலின்! நடிகர் வடிவேலு பேச்சு!!
Feb 28, 2025, 06:59 IST

பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நடிகர் வடிவேலு 2026 சட்டமன்றத்தில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை திமுக கைப்பற்றும். அண்ணன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக பதவியேற்பார் என்று பேசியுள்ளார்.
திமுக ஆதரவாளராக இருந்துவரும் வடிவேலு, மாமன்னன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த பிறகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் மிகவும் நெருக்கமான நண்பரும் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.