மிஸ் யூ படத்தின் ஓ.டி.டி வெளியீடு தேதி அறிவிப்பு!!

 
Miss you

பாய்ஸ் படத்தின் மூலம் இயக்குனர் ஷங்கர் அறிமுகப்படுத்திய நடிகர்களில் ஒருவர் சித்தார்த். தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான் சித்தா படம் நல்ல வரவேற்பைப் பெற்றது,

தற்போது இயக்குனர் நா.ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த் நடித்த மிஸ் யூ படத்திற்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ளார். கருணாகரன், பால சரவணன், லொள்ளு சபா மாறன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.7 மைல்ஸ் பெர் செகண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். எழுத்தாளரும் திராவிட இயக்க செயற்பாட்டளருமான அசோக் வசனம் எழுதியுள்ளார்.

ஒரு இளைஞன் தனக்கு பிடிக்காத ஒரு பெண்ணை, தீவிரமாகக் காதலிக்கிறான் ஏன் ? எப்படி? எதற்கு? தனக்குப் பிடிக்கவில்லை எனும்போதும், நாயகன் ஏன் காதலிக்கிறான் என்பது தான் ஒருவரிக் கதை. தமிழ் சினிமாவில் இது வரையிலும் இல்லாத புதிய வகைத் திரைப்படமாக வந்துள்ளது.

வருகிற 26-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மிஸ் யூ படம் வெளியாக உள்ளது.

 

From around the web