முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு! இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சி!!

ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா அவர்கள். தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக நேரில் சென்று இசைஞானி இளையராஜாவை வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதை தனது எக்ஸ் தளத்திலும் பகிர்ந்து இருந்தார்.
இருவரும் சந்தித்துப் பேசிய போது, எத்தனையோ பட்டங்கள் பெற்றாலும் கலைஞர் சூட்டிய இசைஞானி தான் நிலைத்து நிற்கிறது என்று பெருமிதம் அடைந்தார் இளையராஜா. கலைஞருக்காக உங்கள் பிறந்தநாளை ஒரு நாள் முன்னதாகவே மாற்றிக்கொண்டீர்கள் அல்லவா என்று முதலமைச்சர் பெருமையுடன் புகழாரம் சூட்டினார்.
முதலமைச்சருடனான சந்திப்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் இசைஞானி இளையராஜா. “முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தங்கள் நிறைந்த பணிச்சூழலில் நேரம் ஒதுக்கி நேரில் வந்து வாழ்த்தியதிலும், இசைக்கு அளித்த பேராசியும் என்னை மகிழ்ச்சியில் மூழ்கச் செய்தன! மிக்க நன்றி!” என்று குறிப்பிட்டுள்ளார் இளையராஜா.