பிரபல நடிகை மீரா ஜாஸ்மின் தந்தை காலமானார்.. சோகத்தில் திரையுலகம்!
பிரபல நடிகை மீரா ஜாஸ்மினின் தந்தை வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 83.
2001-ல் வெளியான ‘சூத்ரதாரன்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவர், 2002-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து, பாலா, புதிய கீதை, ஆஞ்சநேயா, ஆய்த எழுத்து, கஸ்தூரி மான், சண்டக்கோழி, நேப்பாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் பிசியாக நடித்து வந்த நடிகை மீரா ஜாஸ்மின் 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துபாயில் என்ஜினியராக பணிபுரிந்து வந்த அணில் ஜான் டிட்டுஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தமிழில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ‘விஞ்ஞானி’ படத்தில் கடைசியாக மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார்.
அதன் பின் சினிமாவில் இருந்து விலகியிருந்த மீரா ஜாஸ்மின் தற்போது சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியுள்ளார். மக்கள், விமானம், படவெட்டு, குயின் எலிசபெத் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், மீரா ஜாஸ்மினின் தந்தை ஜோசப் பிலிப் (83) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். எர்ணாகுளத்தில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்தது. ஜோசப்க்கு மனைவி ஏலியம்மா ஜோசப் மற்றும் மீரா ஜாஸ்மின். இவர்களுக்கு மீரா ஜாஸ்மின் தவிர மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகையின் தந்தை மறைவுக்கு திரையுலகினர் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.