பிரபல நகைச்சுவை நடிகர் திருமணம்.. பொண்ணு யாரு தெரியுமா?

 
Redin Kingsley

டாக்டர் படம் மூலம் பிரபலமான ரெடின் கிங்ஸ்லி, டிவி நடிகை சங்கீதாவை இன்று திருமணம் செய்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

2018-ல் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரெடின் கிங்ஸ்லி. நெல்சன் இயக்கிய டாக்டர் படத்தில் பஹத் என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ரஜினியுடன் அண்ணாத்த, விஜய்யுடன் பீஸ்ட், விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல், சிம்புவுடன் பத்து தல, விஷாலுடன் மார்க் ஆண்டனி, கட்டா குஸ்தி உட்பட பல படங்களில் காமெடியில் கலக்கியுள்ளார்.

Redin Kingsley

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் திவ்யநாதன் என்ற கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ரெடின் கிங்ஸ்லி, தற்போது லீடிங் காமெடி நடிகராக மாஸ் காட்டி வருகிறார். இந்நிலையில், இன்று அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. மணக்கோலத்தில் தனது மனைவியுடன் இருக்கும் ரெடின் கிங்ஸ்லியின் போட்டோஸ் வைரலாகி வருகின்றன.

டாக்டர் படத்துக்குப் பின்னரே நடிப்பில் பிஸியாகியுள்ளார். இதனால் அவருக்கு தாமதமாகவே திருமணம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி, ரெடின் கிங்ஸ்லிக்கு தற்போது வயது 46 என சொல்லப்படுகிறது. ரெடின் கிங்ஸ்லியின் மனைவி பெயர் சங்கீதா எனவும், அவர் பிரபல சீரியல் நடிகை என்பதும் குறிப்பிடத்தக்கது. அரண்மனைக்கிளி, திருமகள், ஆனந்த ராகம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார் சங்கீதா. அதேபோல் மாஸ்டர், பாரீஸ் ஜெயராஜ், வீட்ல விஷேசம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.


இந்நிலையில், ரெடின் கிங்ஸ்லிக்கு திருமணம் நடந்ததை அடுத்து திரை பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். புதுமாப்பிள்ளை லுக்கில் ரெடின் கிங்ஸ்லி தனது மணவாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்கியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

From around the web