மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்.. எட்டே வார்த்தையில் நறுக்கென பதிலளித்த த்ரிஷா!

 
Mansoor

நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து நடிகை த்ரிஷா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

லியோ படத்தில் நடித்த மன்சூர் அலிகான் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது நடிகை த்ரிஷா இந்த படத்தில் நடித்தார் என எனக்கு தெரிந்தவுடன் அவரை பலாத்காரம் செய்யும் காட்சிகள் இருக்கும் என நினைத்தேன். ஆனால் இல்லாமல் போய்விட்டது. இருந்திருந்தால் குஷ்பு உள்ளிட்டோருடன் அந்த காட்சிகளில் நடித்தது போல் நடித்திருப்பேன் என தெரிவித்தார்.

இந்த பேச்சுக்கு பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். பெண்கள் என்ன பலாத்காரம் செய்யும் பொருளா என்ற கேள்வி எழுந்துள்ளது. காமெடி என்ற பெயரில் இப்படி வன்மத்தை கக்குவதா என்றும் விமர்சனங்கள் வந்தன. நடிகை த்ரிஷாவும் இது போல் மனிதத்தன்மை இல்லாத ஒருவருடன் இனி நான் எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என கூறி கண்டித்திருந்தார்.

Mansoor Ali khan

இதையடுத்து மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நேற்று விசாரணைக்கு ஆஜராக கோரி சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினர். இதையடுத்து நேற்று மன்சூர் அலிகான் சென்னை, ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து நடிகை த்ரிஷாவிடம் அவர் மன்னிப்பு கேட்டே தீரவேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், மன்னிப்பு கேட்கமுடியாது நான் அவ்வாறு தவறான அர்த்தத்தில் பேசவில்லை என்று மறுத்து வந்த மன்சூர் அலிகான். தற்போது த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.


இந்த நிலையில், நடிகை த்ரிஷா இதற்கு பதிலளிக்கும் வகையில் அவரது எக்ஸ் தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “தவறு செய்வது மனிதம், மன்னிப்பவர் தெய்வம்” என்று பதிவிட்டுள்ளார்.

From around the web