பிரபல நடிகரை கத்தியால் சரமாரியாகக் குத்திய மர்ம நபர்
Updated: Jan 16, 2025, 10:30 IST

பிரபல இந்தி நடிகர் சாய்ஃப் அலி கான் இந்தி நடிகை கரீனா கபூரை திருமணம் செய்து முமபை பாந்த்ரா பகுதியில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இன்று அதிகாலை இரண்டரை மணி அளவில் மர்ம நபர் ஒருவர் அவர்களுடைய வீட்டுக்குள் புகுந்துள்ளார். திருடுவதற்காக வந்த நபரை சாய்ஃப் அலி கான் பார்த்து விட்டார். அவரிடமிருந்து தப்பிச் செல்வதற்காக நடிகர் சாய்ஃப் அலி கானை சரமாரியாகக் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளான் மர்ம நபர்.
உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சாய்ஃப் அலி கானுக்கு உடலில் 6 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டு சிகிச்சை நடைபெற்று வருகிறது. மும்பை குற்றப்பிரிவு போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்