மாமன்னன் சக்சஸ்... மாரி செல்வராஜுக்கு சொகுசு கார் பரிசு அளித்த உதயநிதி ஸ்டாலின்! வைரல் புகைப்படங்கள்

 
Mari Selvaraj - Udhay

மாமன்னன் படத்தை தன் வாழ்வில் மறக்கமுடியாத படமாக அமைத்து கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜூக்கு மினி கூப்பர் கார் ஒன்றை உதயநிதி ஸ்டாலின் பரிசளித்துள்ளார்

ஒரு கல் ஒரு கண்ணாடி, கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள உதயநிதி ஸ்டாலின் தற்போது ‘மாமன்னன்’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Udhay

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த மாதம் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். மாமன்னன் படத்திற்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பால், இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்த சூழலில் மாமன்னன் படத்தை தன் வாழ்வில் மறக்கமுடியாத படமாக அமைத்து கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜூக்கு மினி கூப்பர் கார் ஒன்றை உதயநிதி ஸ்டாலின் பரிசளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.


இந்நிலையில் அத்தனைக்கும் நன்றியும் ப்ரியமும் உதயநிதி ஸ்டாலின் சார் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “மாமன்னன் கதை எந்த புள்ளியில் தொடங்கியதோ சரியாக அந்த புள்ளியில் நின்று ஒட்டுமொத்த மானுட சமூகத்தின் கரம் பற்றி பெரும் நெகிழ்ச்சியோடும் சொல்கிறேன் அத்தனைக்கும் நன்றியும் ப்ரியமும் உதயநிதி ஸ்டாலின் சார்” என்று பதிவிட்டுள்ளார்.

From around the web