மலையாள திரைப்பட கலை இயக்குனர் ஹரி வர்கலா மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்!

 
Hari Varkala

மலையாள திரைப்பட கலை இயக்குநர் ஹரி வர்கலா இன்று காலமானார். அவருக்கு வயது 72.

மலையாள சினிமாவில் பல வெற்றிப்படங்களை உருவாக்க கலை இயக்குநராக முக்கிய பங்காற்றியவர் ஹரி வர்கலா. இவர், 1984-ம் ஆண்டு பிரபல இயக்குநர் ஜோஷி இயக்கத்தில் வெளியான ‘சந்தர்பம்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார்.

ஜோஷியுடன் இவரது ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணியில் பல வெற்றிப்படங்கள் உருவாகின. அதில், ‘நாயர் சாப்’, ‘பத்ரம்’, ‘லேலம்’, ‘எண்.20 மெட்ராஸ் மெயில்’ மற்றும் பல படங்கள் அடங்கும்.

Hari varkala

90-கள் மலையாள சினிமாவிற்கு பொற்காலம் எனலாம். அப்போது பல வெற்றிப்படங்களுக்கு பின்னால் ஒரு முக்கிய நபராக இருந்தவர் ஹரி வர்கலா. 40-க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

இவ்வாறு பல வெற்றிப்படங்களில் பணியாற்றிய ஹரி வர்கலா காலமானார். 72 வயதான இவர் தனது இல்லத்தில் இன்று காலமானார்.  இதனையடுத்து,  இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

RIP

கடைசியாக 2015-ம் ஆண்டு ஜோஷி இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘லைலா ஓ லைலா’ திரைப்படத்தில் ஹரி வர்கலா பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web