மலையாள டிவி நடிகரை காதலித்து கரம் பிடித்த சாட்டை பட நடிகை.. ரசிகர்கள் வாழ்த்து!

 
Swasika Vijay

சாட்டை பட நடிகை சுவாசிகா மலையாள நடிகரை காதலித்து கரம் பிடித்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2009-ல் வெளியான ‘வைகை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுவாசிகா. தொடர்ந்து கோரிபாளையம், மைதானம், சாட்டை, கண்டதும் கனத்தும், சோக்காளி, அப்புச்சி கிராமம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் லப்பர் பந்து படத்தில் நடித்து வருகிறார். கேரளாவை சேர்ந்த சுவாசிகா மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.

Swasika Vijay

அதேபோல் விஜய் டிவியில் தற்போது புதிதாகத் தொடங்கி இருக்கக்கூடிய சீரியல் ‘நீ நான் காதல்’. இந்த சீரியலில் கதாநாயகனாக பிரேம் ஜேக்கப் நடிக்கிறார். இவர் மலையாளத்தில் பல சீரியல்களில் நடித்துப் பிரபலமானவர். தற்போது தமிழிலும் ‘நீ நான் காதல்’ சீரியல் மூலம் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் சுவாசிகாவுக்கும், மலையாள டிவி நடிகர் பிரேம் ஜேக்கப் இருவரும் காதலித்து வந்தனர்.  இருவரும் டிவி தொடர் ஒன்றில்  இணைந்து நடித்தபோது பழகி பின்னர் காதலித்துள்ளனர். இப்போது இரு குடும்பத்தார் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் செய்திருக்கின்றனர். கேரளாவில் இந்த ஜோடியின் திருமணம் நண்பர்கள், உறவினர்கள் சூழ நடந்திருக்கிறது.

இந்தப் புகைப்படங்களை இவர்கள் பகிர்ந்து, ‘நாங்கள் இனி என்றென்றும் ஒன்றாக’ எனக் காதலை வெளிப்படுத்தியுள்ளனர். திருமணத்தில் சுரேஷ்கோபி உள்ளிட்ட நடிகர்கள் பலர் பங்கேற்று வாழ்த்தினர். திருமண புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த ஜோடிக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

From around the web