குட்டி குட்டி ஆடை.. பிரபல வைரல் நடிகை கைது.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 
Urfi Javed

பிரபல நடிகை உர்பி ஜாவேத் ஒழுங்கற்ற ஆடைகள் அணிந்ததற்காக மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது போன்ற வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

‘பிக் பாஸ்’ புகழ் உர்பி ஜாவேத் தனது வித்தியாசமான பேஷன் ஆடைகளுக்காக பிரபலமானவர். அவருடைய தனித்துவமான ஆடைகள் பெரும்பாலும் ஆச்சரியப்படவைக்கும். கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள் அல்லது பூ இதழ்கள் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்து தனது உடலை மறைத்து புகைப்படங்களாக வெளியிடுவார்.

அதேசமயம், தன்னுடைய அதிரடிகளால் பலரின் மனதையும் சில சமயம் காயப்படுத்தியும் இருக்கிறார். அடிக்கடி ஆபாச மற்றும் வித்தியாசமான அரைகுறை ஆடைகளை அணிந்து பொதுவெளியில் போஸ் கொடுத்து வந்ததால், எந்நேரமும் இவர் லைம்லைட்டிலேயே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Urfi Javed

முன்னதாக மும்பையில் தனக்கு வீடு வாடகைக்கு கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து உர்பி வேதனையாகப் பதிவிட்டது இணையத்தில் பேசுபொருளானது. “நான் உடுத்தும் உடையால் முஸ்லிம்கள் எனக்கு வீடு வாடகைக்கு தர விரும்பவில்லை. இன்னொருபுறம் நான் முஸ்லிம் என்பதால் இந்துக்கள் எனக்கு வீடு வாடகைக்கு விடுவதில்லை. மேலும் சில உரிமையாளர்களுக்கு எனக்கு வரும் அச்சுறுத்தல்கள் சிக்கல்களாக உள்ளன. மும்பையில் வாடகைக்கு ஒரு வீட்டைத் தேடி கண்டுபிடிப்பது மிகக் கடினமானது” எனப் பதிவிட்டிருந்தார்.

தற்போது உர்பி ஜாவேத் மும்பை போலீசாரால் கைது செய்யப்படும் வீடியோ இணையதளத்தில் வைலராகி வருகிறது. பிரபல புகைப்பட கலைஞரான விரால் பயானி பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றில் மும்பையில் இருக்கும் கஃபே ஒன்றில் காஃபி குடித்துக் கொண்டிருந்த உர்பியை இரண்டு பெண் போலீஸ் கைது செய்தனர். ஒழுங்கற்ற ஆடைகளை அணிந்திருந்ததால் அவரை கைது செய்வதாக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

உர்பி கைது செய்யப் பட்டதாக ஒரு பக்கம் தகவல் பரவி வரும் நிலையில் மறுபக்கம் இந்த தகவல் பொய்யென்றும் ஒரு சிலர் கூறி வருகிறார்கள். மும்பை போலீஸ் உர்பியை கைது செய்யவில்லை என்றும் இந்த வீடியோ பப்ளிசிட்டிக்காக உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

From around the web