காதல் கணவருக்கு லிப் லாக்... முதல் சந்திப்பு நாளை கொண்டாடிய அமலா பால்!

 
Amala paul

நடிகை அமலா பால் கணவர் ஜகத் தேசாய்க்கு லிப் லாக் அடித்து முதல் சந்திப்பு நாளை கொண்டாடிய ரொமான்டிக் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

2009-ல் வெளியான ‘நீலதாமரா’ படத்தின் மூலம் மலையாள சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதனைத் தொடர்ந்து, 2010-ல் வெளியான ‘வீரசேகரன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் சிந்து சமவெளி, மைனா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மைனா படத்தில் மலைவாழ் கிராமத்தில் வாழும் அழகிய பெண்ணாக இவர் வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள், தலைவா படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

Amala Paul

தெய்வத்திருமகள் படத்தின் படப்பிடிப்பின் போது ஏ.எல்.விஜய் மற்றும் அமலாபால் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. பின்னர் 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு மனமுவந்து பிரிவதாக இருவரும் அறிவித்து பிரிந்து விட்டனர். மலையாளம், தெலுங்கு, தமிழ் என நடித்துவரும் அமலாபால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி அமலா பாலின் பிறந்தநாள் அன்று தன்னுடைய காதலன் ஜெகத் தேசாய் புரோபோஸ் செய்த, புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட அவை படு வைரலானது. மேலும் தன்னுடைய காதலன் புரோபோஸ் செய்த ஒரே வாரத்தில் அமலா பால், ஜெகத் தேசாய் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். அமலா பாலுக்கு முதல் சந்திப்பு நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில் இன்று கேக் வெட்டி தனது முதலாம் ஆண்டு திருமண கொண்டாடினார்.

கணவர் ஜகத் தேசாய்க்கு லிப் லாக் அடித்து முதல் சந்திப்பு நாளை கொண்டாடிய ரொமான்டிக் புகைப்படத்தையும் அமலா பால் சமூக வலைதளத்தில் ஷேர் செய்துள்ளார். கணவருடன் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களையும் அமலா பால் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். நடிகை அமலா பாலின் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. நடிகை அமலா பால் ஜகத் தேசாய் என்பவரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி அமலா பால் காதலித்து திருமணம் செய்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

From around the web