சூடான தீ கங்கு மாதிரி.. வெளியானது புஷ்பா 2 படத்தின் 2வது பாடல்.. கிறங்க வைத்த ராஷ்மிகா!

 
Pushpa 2

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான ‘சூடான தீ’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

2021-ல் சுகுமார் இயக்கத்தில் உருவாகி மெகா ஹிட்டான படம் புஷ்பா. பான் இந்தியா அளவில் வெளியாகி 500 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பாகுபலி படத்துக்கு பிறகு பல மொழிகளில் ஹிட்டான தெலுங்கு படம் என்ற பெயரையும் புஷ்பா திரைப்படம் பெற்றது. அப்படத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜுன், சுகுமார் கூட்டணியில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. புஷ்பா தி ரூல் (புஷ்பா 2) என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Pushpa 2

இந்த நிலையில், கடந்த மாதம் 8-ம் தேதி அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு அப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து படத்தின் ‘புஷ்பா புஷ்பா’ என்ற முதல் பாடலின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலானது. இந்நிலையில், ‘புஷ்பா 2 தி ரூல்’ படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தற்போது செகண்ட் சிங்கிளையும் படக்குழு வெளியிட்டுள்ளது. The Couple Song என்ற கேப்ஷனுடன் வெளியாகியுள்ள புஷ்பா 2 செகண்ட் சிங்கிள், ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளது. “சூடான தீ கங்கு மாதிரி” எனத் தொடங்கும் இப்பாடலை ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத்தின் ரகளையான இசையில் உருவாகியுள்ள இப்பாடலில் அல்லு அர்ஜுனும் ராஷ்மிகா மந்தனாவும் ஜோடியாக போட்டுள்ள ஆட்டம், ரசிகர்களுக்கு எனர்ஜி பூஸ்டராக அமைந்துள்ளது. முக்கியமாக இப்பாடலின் மேக்கிங் வீடியோ மட்டுமே தற்போது வெளியாகியுள்ளது. இதன் ஒரிஜினல் வெர்ஷன் புஷ்பா 2 ரிலீஸாகும் போது படத்தில் இடம்பெறவுள்ளது. 

அதேநேரம் தற்போது வெளியாகியுள்ள மேக்கிங் வீடியோவில் இயக்குநர் சுகுமாருடன் ராஷ்மிகா மந்தனா டான்ஸ் ஆடியுள்ளார். இதனை ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள், ராஷ்மிகா மந்தனாவின் க்யூட் ரியாக்ஷன்களுக்கும் ஆர்ட்டின்ஸ் எமோஜிகளை பறக்க விட்டு வருகின்றனர். புஷ்பா 2ம் பாகத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்களுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. இதனால் புஷ்பா 2 ஆல்பத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. தற்போது வெளியான புஷ்பா 2 செகண்ட் சிங்கிளை, 6 மொழிகளிலும் ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web