தனியா ரூமுக்கு வா.. சரக்கடிக்கலாம்... பிரபல நடிகையை அழைத்த தயாரிப்பாளர்..!

 
Jennifer Mistry

தயாரிப்பாளர் அசித் குமார் மோடி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல நடிகை ஜெனிபர் மிஸ்ட்ரி போலீசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2008-ம் ஆண்டு முதல் சாப் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டிவி தொடரில் நடித்து வந்த பிரபல நடிகை ஜெனிபர் மிஸ்ட்ரி பன்சிவால். இவர் அந்த டிவி தொடரின் தயாரிப்பாளர் அசித் குமார் மோடி மீது பாலியல் தொல்லை புகார் அளித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள புகாரில் தயாரிப்பாளர் அசித் குமார் மோடி தன்னை தனியாக ரூமுக்கு வா சரக்கடிக்கலாம் என அழைத்தார் என்றும் அடிக்கடி ஆபாசமாக பேசுவது, தவறாக தொடுவது என எல்லை மீறினார் எனத் தெரிவித்துள்ளார்.

Jennifer MIstry

மேலும், கடந்த 4 மாதத்துக்கு முன்னதாகவே அவரது நடவடிக்கைகள் பிடிக்காமல் தொடரில் இருந்து வெளியேற போகிறேன் என சொன்ன நிலையில், தனக்கு வர வேண்டிய 4 மாத சம்பளத்தை பிடித்து விடுவோம் என இணைத் தயாரிப்பாளர்கள் இருவர் மிரட்டியதாகவும் மேலும், அவர்களும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், நடிகை சொல்வது அனைத்துமே பொய் என்று தயாரிப்பாளர் அசித் குமார் மோடி தரப்பில் இருந்து ஒரு புகாரும் மும்பை போலீசாருக்கு சென்றுள்ளது. அதில், நடிகை சரியாக ஷூட்டிங் வருவது கிடையாது என்றும் அவர் நடத்தை சரியில்லை என பேச்சுக்கள் அடிபட்ட நிலையில் தான் அவரை அந்த சீரியலில் இருந்து தூக்கினோம். வேலை போன விரக்தியில் இப்படி என் மீதும் என் ஷோ மீது அபாண்டமான பழி சுமத்தி வருகிறார். இதற்காக அவர் மீது மான நஷ்ட வழக்கும் பதிவு செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

A post shared by Jennifer Mistry Bansiwal🧚‍♀️♾ (@jennifer_mistry_bansiwal)

இந்த நிலையில், நடிகை ஜெனிபர் மிஸ்ட்ரி தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பலவீனமாக என் மௌனத்தை எடுத்துக் கொள்ளாதே, நான் விரும்பியதால் தான் இருந்தேன். உண்மை என்னவென்று கடவுளுக்குத் தெரியும், அவர் முன் நாம் சமம் என்பதை மறந்துவிடாதீர்கள் என்று கூறியுள்ளார்.

From around the web