‘லியோ’ - ‘எஸ்கே 21’ படக்குழு சந்திப்பு... எதற்கு தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் ‘எஸ்கே 21’ படத்தின் படக்குழுவினர் ‘லியோ’ படக்குழுவினர்களிடம் சில முக்கிய ஆலோசனைகளை கேட்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. சாந்தி டாக்கீஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க, மிஷ்கின் மற்றும் சுனில் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
‘மாவீரன்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருக்கும் திரைப்படம் தான் ‘எஸ்கே 21’. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற இருப்பதாகவும் விரைவில் சிவகார்த்திகேயன் உள்பட படக்குழுவினர் காஷ்மீர் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ‘லியோ’ படக்குழுவினர்களிடம் ‘எஸ்கே 21’ படக்குழுவினர் காஷ்மீரில் உள்ள அழகிய லொகேஷன்கள் மற்றும் வெப்பநிலை குறித்து ஆலோசனை கேட்க இருப்பதாக கூறப்படுகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ‘லியோ’ படப்பிடிப்பில் கலந்து கொண்ட சிலர் ‘எஸ்கே21’ படக்குழுவினர்களுக்கு சில நல்ல ஆலோசனைகளை கூறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய்பல்லவி நடிக்க இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் காஷ்மீரில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.