பழம்பெரும் மலையாள நடிகர் மரணம்.. திரையுலகினர் இரங்கல்!
பழம்பெரும் மலையாள நடிகர் சிவி தேவ் காலமானார். அவருக்கு வயது 83.
1940-ல் வடகரை செம்மரத்தூரில் பிறந்த சிவி தேவ், 19 வயதில் ‘விளக்கிண்டே வெளிச்சத்தில்’ என்ற படம் மூலம் மலையாள திரையுலகில் நடிகராக அறிமுகமானார். இந்த படம் 1959-ல் வெளியானது. 1982-ல் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய ‘கோபுர நடையில்’ படத்தில் நடித்து இருந்தார்.
தொடர்ந்து ‘பொந்தன் மட’ என்ற படத்தில் மம்முட்டி மற்றும் நசுருதின் ஷாவுடன் இணைந்து நடித்து இருந்தார். சத்யம், ஈ புழையும் கடன்னு, மிழி இரண்டிலும். சந்திரோல்சவம், சந்தோஷம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 'யாரோ ஓராள்' என்ற படத்தை இயக்கினர்.
கடந்த சில மாதங்களாக நடிகர் சிவி தேவ் இதயக் கோளாறு காரணமாக கோழிக்கோட்டில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 26-ம் தேதி காலமானார். மூத்த நடிகரின் இறுதிச் சடங்குகள் செவ்வாய்கிழமை (ஜூன் 27) காலை வெஸ்ட் ஹில் தகனத்தில் நடைபெற்றது.
மறைந்த சிவி தேவுக்கு, ஜானகி என்ற மனைவியும், சுகன்யா, சுகவ்யா என்ற மகள்களும் சுகாத்மஜன் என்ற மகனும் உள்ளனர். இவரது மறைவுக்கு கேரள முதல்வர் மற்றும் மலையாள நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.