லெஜெண்ட் சரவணனின் அடுத்த படம்.. குழந்தைகளுடன் பகிர்ந்த தகவல்!

 
Legend Saravanan

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குழந்தைகளை சந்தித்த லெஜண்ட் சரவணன் தனது அடுத்தப் பட அறிவிப்பை பகிர்ந்துகொண்டார்.

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் ஹன்சிகா, தமன்னா என முன்னணி நடிகைகளுடன் பெஸ்ட் பெஸ்ட் என்று ஆட்டம் போட்டுவர் லெஜண்ட் சரவணன். அந்த விளம்பரங்கள் ரசிகர்களிடையே அவரை மிகவும் பிரபலமாக்கியது. தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாகி வசூலை அள்ளியது.

தி லெஜண்ட் படத்தில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்திருந்தார். அதுமட்டுமின்றி விஜயகுமார், ரோபோ சங்கர், நாசர், பிரபு, யோகிபாபு, மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மொசலு மொசலு, வாடிவாசல் பாடலும் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.

Legend Saravanan

இந்த படத்தில் சரவணன் சர்க்கரை வியாதிக்கு குறைந்த விலையில் மருந்து கண்டுபிடிக்கும் விஞ்ஞானியாக நடித்திருந்தார். படம் சுமாராக ஓடிய போது, ரசிகர்கள் லெஜண்ட் சரவணனை கடுமையாக ட்ரோல் செய்தனர். படத்தின் நடித்திருக்கும் காட்சிகளை பகிர்ந்தும் மீம்ஸ்களை போட்டு கிண்டல் அடித்தனர். லெஜண்ட் அண்ணாச்சி நெட்டிசன்களின் விமர்சனத்தை கண்டு கொள்ளாமல், தனது அடுத்த பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.

இந்நிலையில், லெஜண்ட் சரவணன் 77வது சுதந்திர தினத்தை குழந்தைகளுடன் கொண்டாடி உள்ளார். அந்த போட்டோவில் டிப் டாப்பாக டீ ஷர்ட் போட்டுக்கொண்டு இருக்கிறார். இந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள், லெஜண்ட் சரவணனா இது என்று வாயை பிளந்துள்ளனர். இன்னும் சில ரசிகர்கள் அட நம்புங்கப்பா உண்மையிலேயே லெஜண்ட் அண்ணாச்சி தான் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

A post shared by Legend Saravanan (@yoursthelegend)

மேலும், அந்த குழந்தையிடம் ஒரு கதைக்காகத்தான் இத்தனை நாள் காத்துக்கொண்டு இருந்தேன். இப்போதுதான், நல்ல கதை கிடைத்து உள்ளது. விரைவில் படப்பிடிப்பை தொடங்கி விரைவில் படத்தை வெளியிடுவேன் என்று லெஜண்ட் சரவணன் தனது அடுத்த படத்திற்கான அப்டேட்டை வெளியிட்டார்.

From around the web