பார்பி கேர்ள் லுக்கில் கீர்த்தி ஷெட்டி .. நயன்தாரா வெளியிட்ட லவ் இன்சூரன்ஸ் கம்பெனி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை கிரித்தி ஷெட்டியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. இப்படத்தில் கிரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக இப்படத்திற்கு ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்த தலைப்பு என்னுடையது என இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் தெரிவித்து விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடுப்பதாக அறிக்கை வெளியிட்டார். அது மட்டுமின்றி இந்த தலைப்பு பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என எல்ஐசி நிறுவனமும் படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மாதம் 25-ம் தேதி அவருக்கு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தது படக்குழு. அதில் படத்தின் பெயரை ‘எல்ஐகே’ (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) எனத் தலைப்பை மாற்றினர்.
இதையடுத்து இப்படத்தில் நடித்துவரும் எஸ்.ஜே.சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது படத்தின் கதாநாயகியான கிரித்தி ஷெட்டியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Here is @IamKrithiShetty #LoveInsuranceKompany #LIK
— Seven Screen Studio (@7screenstudio) August 2, 2024
@VigneshShivN @pradeeponelife@iam_SJSuryah @anirudhofficial pic.twitter.com/eVoz50BkaE
கிரித்தி ஷெட்டியின் நகைச்சுவையான அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், அவர் ஸ்டைலான சில்வர் சில்வர் நிற உடையில், ட்ரான்ஸ்ப்ரண்ட் மொபைலை வைத்திருக்கும்படி போஸ்டர் அமைந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பார்பி கேர்ள் லுக்கில் கமெண்ட் செய்து வருகிறார்கள். நடிகைக்கு பின்னால் இருக்கும் டிஜிட்டல் கடிகாரம் 2035-ம் ஆண்டைக் காட்டுகிறது, எதிர்காலத்தை மனதில் வைத்து இந்த படத்தின் கதை அமைந்திருக்கலாம்.