பிரபல நடிகர் அசோக் செல்வனை கரம்பிடித்த நடிகை கீர்த்தி பாண்டியன்.. வைரலாகும் வீடியோ!

 
Ashok Selvan - Keerthi Pandian

நடிகர் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் திருமணம் இன்று திருநெல்வேலியில் விமரிசையாக நடைபெற்றது.

2013-ல் வெளியான ‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் அசோக் செல்வன். வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் இவருக்கு ‘ஓ மை கடவுளே’ திருப்புமுனை படமாக அமைந்து. இதனை தொடர்ந்து பீட்சா 2, தெகிடி, சவாலே சமாளி, மன்மத லீலை, ஹாஸ்டல்,சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

Ashok - Keerthi

இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘போர் தொழில்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சரத்குமார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். விமர்சனரீதியாக மட்டுமல்லாமல் வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் நடிகர் அசோக் செல்வன், நடிகர் அருண் பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. பா.ரஞ்சித் தயாரித்துவரும் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் திருமணம் செப்டம்பர் 13-ம் தேதி நெல்லையில் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. 


இந்த நிலையில், இன்று திருநெல்வேலி சேது அம்மாள் பண்ணையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் விமரிசையாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதில், அருண் பாண்டியன் தந்தை மற்றும் நடிகை ரம்யா பாண்டியன் உறவினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

From around the web