செம கியூடாக வந்த கீர்த்தி பாண்டியன்.. திருமண விழா வீடியோவை பகிர்ந்த அசோக் செல்வன்!

நடிகர் அசோக் செல்வன் தனது திருமண விழா வீடியோ தொகுப்பை பகிரிந்துள்ளார்.
2013-ல் வெளியான ‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் அசோக் செல்வன். வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் இவருக்கு ‘ஓ மை கடவுளே’ திருப்புமுனை படமாக அமைந்து. இதனை தொடர்ந்து பீட்சா 2, தெகிடி, சவாலே சமாளி, மன்மத லீலை, ஹாஸ்டல்,சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘போர் தொழில்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சரத்குமார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். விமர்சனரீதியாக மட்டுமல்லாமல் வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் நடிகர் அசோக் செல்வன், நடிகர் அருண் பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. பா.ரஞ்சித் தயாரித்துவரும் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 13-ம் தேதி திருநெல்வேலி சேது அம்மாள் பண்ணையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் விமரிசையாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதில், அருண் பாண்டியன் தந்தை மற்றும் நடிகை ரம்யா பாண்டியன் உறவினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Thank you ❤️
— Ashok Selvan (@AshokSelvan) September 26, 2023
13.09.2023 ♾️#grateful #AshoKee🔥@iKeerthiPandian @vizhamedai @mim_madeinmono pic.twitter.com/UjeYtcF8h2
இந்நிலையில், நடிகர் அசோக் செல்வன் தனது திருமண வீடியோ தொகுப்பை பகிர்ந்து நெகிழ்ந்து உள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.