நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கிறார் கவின்.. ஆகஸ்ட் 20-ல் திருமணம்

 
Kavin

நடிகர் கவின் தன் காதலியான மோனிகாவை வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி திருமணம் செய்யவுள்ளார்.

2011-ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடர் மூலம் அறிமுகமானவர் கவின். அதனைத் தொடர்ந்து தாயுமானவன், சரவணன் மீனாட்சி என சீரியல்களில் நடித்தன் மூலம் பிரபலமானார். திரைப்படங்களில் உதவி இயக்குநரானாராகவும் பணியாற்றினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தார்.

Kavin

2017-ல் வெளியான ‘சத்ரியன்’, 2019-ல் வெளியான ‘நட்புனா என்னான்னு தெரியுமா’ படங்களில் நடித்தவர் 2021-ல் வெளியான ‘லிஃப்ட்’ படத்தின் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. அதையடுத்து அவர் நடிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.

இதன் மூலம் கவினுக்கெனத் தனி ரசிகர் வட்டம் உருவானது மட்டுமல்லாமல், தயாரிப்பு மற்றும் விநியோக வட்டாரத்திலும் அவரது மதிப்பு உயர்ந்தது. தற்போது நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், அனிருத் இசையில், ஒரு ரொமான்ஸ் படத்தில் நடித்துவருகிறார். இந்த நிலையில் அவரது திருமண அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Kavin

தனியார்ப் பள்ளியில் பணியாற்றி வரும் மோனிகா என்பவரைக் காதலித்து வந்தார் கவின். மிக ரகசியமான இவர்களின் காதல் தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் திருமணக் கட்டத்தை எட்டியுள்ளது. இவர்களின் திருமணம் அனைவரின் ஆசியுடன் இந்த மாதம் (ஆகஸ்டு) 20-ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.

From around the web