‘சர்தார் 2’ படம் குறித்து அப்டேட் கொடுத்த கார்த்தி.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

 
karthi

நடிகர் கார்த்தி சர்தார் படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் சர்தார் 2 படத்தின் அப்டேடால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘சர்தார்’. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் மற்றும் லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார். ஸ்பை த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

Sardar

உலகம் முழுவதும் தற்போது வரை ரூ.85 கோடிக்கு மேலாக வசூலித்துள்ளது. படத்தின் வெற்றியை முன்னிட்டு தயாரிப்பாளர் லக்ஷ்மன்குமார் டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை இயக்குநர் மித்ரனுக்கு பரிசாக வழங்கியிருந்தார். இந்த நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டை நிறைவு செய்கிறது. 

படம் வெளியான போதே இதன் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பும் அப்போது வெளியானது. இந்த நிலையில் படம் வெளியாகி ஓராண்டு ஆகி இருப்பதை மகிழ்ச்சியுடன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் கார்த்தி, “சர்தார் பட வெற்றிக்குக் காரணமான ரசிகர்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி! விரைவில் ‘சர்தார் 2’ பணிகள் ஆரம்பமாகும்” எனக் கூறியுள்ளார்.


இந்த வருட தீபாவளிக்கு ராஜமுருகன் இயக்கத்தில் கார்த்தியின் ‘ஜப்பான்’ படம் வெளியாகியுள்ளது. இதற்கடுத்து நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார். இதன் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கைதி 2’ ஆரம்பமாகும் என எதிர்பார்க்கலாம்.

From around the web