மதகஜ ராஜா வெற்றிக்கு கார்த்தி வாழ்த்து!!

விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கிய மதகஜ ராஜா திரைப்படம் ஜனவரி 10ம் தேதி வெளியானது. 12 ஆண்டுகள் கிடப்பில் கிடந்த படம் ஒருவழியாக பிரச்சனைகளைக் கடந்து பொங்கலுக்கு வெளியானது. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாகத் தான் இருக்கு என்பதைப் போல் காமெடிக் காட்சிகள் கலக்கலாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. பொங்கல் கொண்டாட்டத்தில் சிரித்து மகிழும் படத்த்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால், மதகஜ ராஜா பொங்கல் ரேஸில் முந்திச் செல்கிறது.
படத்தின் வெற்றியைக் குறிப்பிட்டு வாழ்த்துகள் மச்சி என்று நடிகர் கார்த்தி விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். விஷாலில் உடல்நிலை குறித்து சமீபத்தில் பரபரப்பான செய்திகள் .வெளிவந்த நிலையில் நடிகர் ஆர்யா உள்ளிட்ட விஷாலின் நண்பர்கள் டாக்டர்கள் உதவியுடன்விஷாலை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சித்து வருகின்றனர். கார்த்தியின் வாழ்த்தும் விஷாலுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும் என்பதில் மாற்று இல்லை.