ஷூட்டிங் ஸ்பாட்டில் கங்கனா.. சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினிகாந்த்.. வைரலாகும் புகைப்படங்கள்!

 
kangana

நடிகை கங்கனா ரனாவத் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

2007-ல் அஜித் நடிப்பில் வெளியான ‘கிரீடம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். அதன்பின்னர், பொய் சொல்ல போறோம், மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம், தலைவா உள்ளிட்ட பல படங்களை இயக்கி அனைவரையும் கவர்ந்தார். தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் ‘அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1’ என்ற படத்தை இயக்கினார்.

kangana

தற்போது ஏ.எல்.விஜய் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்தப் படத்தில் மாதவன் மற்றும் கங்கனா ரனவத் இவரும் இணைந்து நடிக்கின்றனர். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. அதில் கங்கனா ரனாவத் காட்சி படமாக்கப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விசிட் அடித்த நடிகர் ரஜினிகாந்த் பட குழுவினரை வாழ்த்தினார். அத்துடன் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகை கங்கனா, ‘முதல் நாள் படப்பிடிப்பின் போது இந்திய சினிமாவின் கடவுள் தலைவர் ரஜினி திடீரென படப்பிடிப்பு தளத்திற்கு வந்தார். என்ன ஒரு அழகான நாள். மாதவன் உங்களை மிஸ் செய்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தில் ‘தலைவர் 170’ படத்தின் கெட்டப்பில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். ரஜினியின் கெட்டப் சூப்பராக இருப்பதாகவும் இந்த படமும் ஜெயிலர் படம் போல் வெற்றி அடையும் என்றும் ரஜினி ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

From around the web