கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் சூப்பர் அப்டேட்.. இயக்குநர் ட்விட்டரில் அறிவிப்பு!!
கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தின் அடுத்த அப்டேட் குறித்து இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டே துவங்கிய இந்தப் படம் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்து, கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. மேலும் லைக்காவுக்கும் ஷங்கருக்கும் பட்ஜெட் தொடர்பான முரண் காரணமாகவும் இந்தப் படம் தாமதமானதாக கூறப்படுகிறது.
ஒரு வழியாக சிக்கல்கள் தீர்ந்து இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே சென்னை, திருப்பதி, பீகார் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதையடுத்து சமீபத்தில் தைவான் நாட்டிற்கு சென்ற இந்தியன் 2 படக்குழு, பாடல் காட்சிகளை படமாக்கினர்.
இதையடுத்து தென் ஆப்பிரிக்கா சென்ற கமல் மற்றும் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர், அங்கு பிரம்மாண்ட சண்டை காட்சி ஒன்றை படமாக்கி வந்தனர். பழங்கால ரயில் ஒன்றில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்ததது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ள இயக்குநர் ஷங்கர், பவர் பேக்டு ஷெட்யூலுக்கு நன்றி கமல் சார். மீண்டும் உங்களை மே மாதம் சந்திக்கிறேன். இந்தியன் 2-ல் இருந்து கேம் சேஞ்சர் பட க்ளைமேக்ஸை படமாக்க செல்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Thank you for this power-packed Schedule @ikamalhaasan sir 🔥 See you again in May! Will be moving from #Indian2Gamechanger for the climax!!! pic.twitter.com/J7WGmzCuxb
— Shankar Shanmugham (@shankarshanmugh) April 18, 2023
‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசன் , காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், மாரிமுத்து, வெண்ணிலா கிஷார், சிவாஜி குருவாயூர் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.