அட்டகாசமா இருக்கும் கமல்.. ரிலீஸ் தேதியுடன் வெளியான ‘தக் லைஃப்’ டீசர்!

 
Thug Life

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தக் லைஃப்’ படத்தின் வெளியீட்டுத் தேதிக்கான டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்கிய மணிரத்னம் நாயகன் படத்திற்கு பிறகு 36 வருடங்கள் கழித்து மீண்டும் கமல்ஹாசன் உடன் இணைந்து உருவாக்கியுள்ள படம் தான் ‘தக் லைஃப்’. இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Thug Life

இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளன. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி சிம்பு, கமல்ஹாசன், மணிரத்னம் , சுஹாசினி மற்றும் சிலர் ஒன்றாக புகைப்படக் எடுத்துள்ளனர். இப்புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், கமல்ஹாசன் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ‘தக் லைஃப்’ படத்தின் வெளியீட்டுத் தேதிக்கான டீசரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

From around the web