கமல்ஹாசனின் மாமா உடல்நலக்குறைவால் மறைவு.. கண்கலங்கிய கமல் மகள்கள்

 
Kamalhasan

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் மாமா சீனிவாசன் நேற்று காலமானார். அவருக்கு வயது 92.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர், மக்கள் நீதீ மய்யம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவரது தாய் மாமா சீனிவாசன் தனது 92வது வயதில் நேற்று காலமானார். கொடைக்கானலில் வசித்து வந்த அவர் அங்கே உயிரிழந்த நிலையில், அவரது உடல் அஞ்சலிக்காக மக்கள் நீதி மய்யத்தில் வைக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது. கமல்ஹாசனின் மாமா வாசுவின் இறுதிச்சடங்கில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார். மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களும், சில சினிமா பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்திச் சென்றனர்.

Kamal Daughters

இதுகுறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “எனது ஆளுமை உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்த ஆருயிர் மாமா சீனிவாசன் இன்று தன்னுடைய 92-வது வயதில் கொடைக்கானலில் காலமானார். புரட்சிகரமான சிந்தனைகளுக்காகவும், துணிச்சலான செயல்களுக்காகவும் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு வீரயுக நாயகனாக திகழ்ந்தவர் வாசு மாமா. இறுதி மரியாதை செலுத்துவதற்காக அவரது உடல் மக்கள் நீதி மய்யம் அலுவலகத்திற்கு இன்றிரவு கொண்டு வரப்படும். நாளை (23-04-24) காலை 10:30 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.” என பதிவிட்டு தனது இரங்கலை தெரிவித்தார்.


தாத்தா சீனிவாசன் காலமான நிலையில், அவரது உடல் மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், ஸ்ருதிஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசன் இருவரும் அந்த இடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினர். அனைத்து வேலைகளையும் அக்‌ஷரா ஹாசன் கவனித்து வந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.

From around the web