பிக்பாஸில் இருந்து விலகும் கமல்? அவருக்கு பதில் இந்த நடிகர்தான் தொகுப்பாளர்!

 
Kamal

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பொறுப்பில் இருந்து நடிகர் கமல்ஹாசன் விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்களின் பார்வை மொத்தமும் நிகழ்ச்சி போட்டியாளர்களின் தேர்வு பட்டியலின் பக்கம் சென்றது. இந்த நிலையில் பிக்பாஸ் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டில் 2 வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளது.

Kamal

இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனின் பலமான போட்டியாளராக கருதப்பட்டவர், பிரதீப் ஆண்டனி. இவரை மக்களுக்கு பிடித்திருந்தாலும், பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இவரை பிடிக்கவில்லை. அவர், தகாத வார்த்தைகளால் பிறரை திட்டுவதும் பெண்களை குறி வைத்து ஆபாச வார்த்தைகளால் பேசுவது போன்ற விஷயங்களை செய்து வந்தார். இதனால், சில பிக்பாஸ் போட்டியாளர்கள் உரிமை குரல் தூக்கி, ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பினர். பிரதீப் வெளியேறிய பிறகு, அவர் தனது நிலையை எடுத்துரைக்க, கமல் வாய்ப்பு தரவில்லை என்ற கருத்து எழுந்தது. பிரதீப்பை, தனது அரசியல் ஆதாயத்திற்காக உபயோகப்படுத்திக்கொண்டதாகவும் கூறப்பட்டது. மேலும், தனக்கு பிடித்தவர்களை கமல்ஹாசன் எதுவும் கூறுவதில்லை எனவும், நடுநிலையாக இருப்பதில்லை எனறவும் கூறப்பட்டது.

இது மட்டுமன்றி, கமல்ஹாசன் வார இறுதியின் எபிசோடில் கொடுக்கும் அட்வைஸையும் பலர் பின்பற்றுவதில்லை என அவரே கூறியிருக்கிறார். இதனால், அவருக்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் மீது அதிருப்தி ஏற்பட்டது. பிரதீப் விவகாரத்தை தொடர்ந்து, கமலுக்கும் பிக்பாஸ் குழுவினருக்கும் சரிபட்டு வரவில்லை என்று கூறப்படுகிறது. கமல், பிக்பாஸ் மேடையை தனது அரசியல் பிரசாரத்திற்காக உபயோகப்படுத்தி கொள்கிறார் என்றும் ரசிகர்கள் கருத்துகளை தெரிவிக்கின்றனர்.

Sarath Kumar

வழக்கமாக பிக்பாஸ் போட்டியாளர்களை மீம்ஸ் போட்டு கலாய்க்கும் ரசிகர்கள், இந்த முறை கமலை கலாய்க்க ஆரம்பித்தனர். இவர் போட்டிருந்த ஆடையில் இருந்து, அவர் பேசிய விஷயங்கள் வரை அனைத்தும் மீம் மெட்டீரியலாக மாறியது. இந்த நிலையில், அவர் இனிவரும் சீசன்களில் தொடர மாட்டார் என கூறப்படுகிறது. இவருக்கு பதிலாக வேறு ஒரு பெரிய நடிகர் தொகுப்பாளராக களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.

ரசிகர்களால் ‘சுப்ரீம் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் சரத்குமார், கமல்ஹாசனுக்கு பதிலாக தொகுப்பாளராக களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. இவரது பெயரோடு சேர்ந்து, இன்னும் 2-3 நடிகர்களின் பெயரையும் பிக்பாஸ் டீம் கலந்தாலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

From around the web