பிக்பாஸ் நிகழ்ச்சில் இருந்து விலகிய கமல்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 
Kamal

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஷோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து நடிகர் கமல்ஹாசன் விலகியுள்ளார்.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 7 சீசன்கள் முடிந்துள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோன்று படங்களின் மூலம் மக்களிடம் சென்றடைந்த கமல்ஹாசன், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவும் ஏராளமானோரின் உள்ளங்களை கவர்ந்தார். 7 சீசன்கள் பிக்பாஸில் முடிந்த நிலையில் 8வது சீசனுக்கான பணிகளில் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Kamal

இந்நிலையில் திடீர் திருப்பமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலிருந்து விலகிக் கொள்வதாக கமல்ஹாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அன்பான பார்வையாளர்களே, 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பிக்பாஸ் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். சினிமா படங்களில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டதன் காரணமாக, பிக்பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை.


உங்கள் இல்லங்களில் உங்களைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. உங்கள் அன்பையும் பாசத்தையும் நீங்கள் எனக்கு அளித்துள்ளீர்கள். அதற்கு என்றும் நன்றியுடையவனாக இருப்பேன்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் டிவியின் அற்புதமான பிக்பாஸ் குழுவிற்கும், இந்த நிறுவனத்தை மாபெரும் வெற்றியடையச் செய்வதில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு குழு உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரவிருக்கும் சீசன் இன்னொரு வெற்றிகரமான நிகழ்ச்சியாக  இருக்கும் என்று நான் நம்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

From around the web