பிரபல இயக்குநருக்கு விலை உயர்ந்த வாட்ச்-ஐ அன்பளிப்பாக வழங்கிய கமல்ஹாசன்!! 

 
Sankar - kamal

இயக்குநர் ஷங்கருக்கு விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை அன்பளிப்பாக நடிகர் கமல்ஹாசன் வழங்கி வாழ்த்தியுள்ளார்.

விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டே துவங்கிய இந்தப் படம் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்து, கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. மேலும் லைக்காவுக்கும் ஷங்கருக்கும் பட்ஜெட் தொடர்பான முரண் காரணமாகவும் இந்தப் படம் தாமதமானதாக கூறப்படுகிறது.

ஒரு வழியாக சிக்கல்கள் தீர்ந்து ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே சென்னை, திருப்பதி, பீகார் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதையடுத்து சமீபத்தில் தைவான் நாட்டிற்கு சென்ற இந்தியன் 2 படக்குழு, பாடல் காட்சிகளை படமாக்கினர். 

Indian 2

இதையடுத்து தென் ஆப்பிரிக்கா சென்ற கமல் மற்றும் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர், அங்கு பிரம்மாண்ட சண்டை காட்சி ஒன்றை படமாக்கி வந்தனர். பழங்கால ரயில் ஒன்றில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அதை தொடர்ந்து படத்தின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இருவரும் இணைந்து படத்திற்கான இசையை உருவாக்கி வரும் வீடியோ அண்மையில் வெளியாகி இணையத்தில் வைரலானது.

இந்தப் படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதையடுத்து இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளதாக நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா காட்சிகள் நிறைவு செய்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், இயக்குநர் ஷங்கருக்கு விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை அன்பளிப்பாக வழங்கி நடிகர் கமல்ஹாசன் வாழ்த்தியுள்ளார்.


இது குறித்து காமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ ‘இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் இயக்குனர் ஷங்கர்.இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி” என தெரிவித்துள்ளார்.

From around the web