கமல்ஹாசன் மற்றும் சல்மான் கான் இணையும் புதிய படத்தை இயக்கும் அட்லீ!

 
Salman-Atlee-Kamal

கமல்ஹாசன் மற்றும் சல்மான் கான் ஆகியோர் அட்லீயின் அடுத்த படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இயக்குநர் அட்லி. ஷங்கர் இயக்கிய எந்திரன், நண்பன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த இவர், ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் திரைப்படம் இயக்குவதற்கு முன்பே இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘முகப்புத்தகம்’ என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார்.

SRK-Nayanthara-Atlee

அதன் பிறகு, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார். இந்த மூன்று படங்களையும் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அடுத்ததாக 2023-ம் ஆண்டு ஷாருக்கான் நடித்து வெளியான ‘ஜவான்’ படத்தை இயக்கினார். இப்படம் 1,200 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன், பிரியாமணி, விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர்.

தற்போது, அட்லீயின் 6-வது படத்தில் இந்தியாவின் இரண்டு பெரிய சூப்பர் ஸ்டார்களான சல்மான் கான் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. பெயரிடப்படாத இப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. ‘ஜவான்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்திற்கும் அனிருத் இசையமைக்க உள்ளார்.

Vijay - Atlee - SRK

கமல்ஹாசன் தொடர்ச்சியாக இளம் இயக்குனர்களுடன் கை கோர்த்து பான் இந்தியா படங்களில் நடிக்க கவனம் செலுத்தி  வருகிறார். விக்ரம், கல்கி 2898 ஏடி படங்களை தொடர்ந்து அவர் அடுத்ததாக அட்லீ உடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web