சினிமாவிலிருந்து விலகும் காஜல்? ரசிகர்கள் அதிர்ச்சி

 
Kajal Agarwal

நடிகை காஜல் அகர்வால் சினிமாவில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

2004-ல் வெளியான ‘கியூன்! ஹோ கயா நா’ படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். அதன்பின்னர் லக்‌ஷ்மி கல்யாணம், சந்தமாமா, பவ்ருடு ஆகிய தெலுங்கு படங்களில் நடித்தார். 2008-ல் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து நடித்த நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஜில்லா, விவேகம், மெர்சல், ஹேய் சினாமிகா போன்றவை வெற்றி படங்களாக அமைந்தன. இந்த நிலையில் தொழில் அதிபர் கௌதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Kajal

காஜல் அகர்வாலுக்கு கடந்த வருடம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நீல் என்று பெயர் வைத்துள்ளனர். பிரசவத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இதனால் வளரும் குழந்தைக்கு முழுமையான தாயின் அன்பை கொடுக்க முடியவில்லை என்ற வருத்தம் அவருக்குள் இருக்கிறது.

இதையடுத்து குழந்தைக்காக சினிமாவை விட்டு முழுமையாக விலக காஜல் அகர்வால் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காஜல் அகர்வால் முடிவை அவரது கணவரும் வரவேற்று உள்ளாராம். சினிமாவுக்கு முழுக்கு போடும் முடிவை காஜல் அகர்வால் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

kajal

காஜல் அகர்வால் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2, தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக பகவத் கேசரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களோடு நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்று தெலுங்கு திரையுலகில் பேசுகின்றனர்.

From around the web