பிக்பாஸ் வீட்டில் அசிங்கப்பட்ட ஜோவிகா.. களத்தில் இறங்கிய தந்தை.. வீடியோ வெளியிட்ட வனிதா!

 
Jovika

நடிகை வனிதா விஜயகுமார், ஜோவிகாவின் தந்தை அனுப்பியதாக கூறி, அவர் தமிழில் சரளமாக வாசிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்களின் பார்வை மொத்தமும் நிகழ்ச்சி போட்டியாளர்களின் தேர்வு பட்டியலின் பக்கம் சென்றது. இந்த நிலையில் பிக்பாஸ் 7-வது சீசன் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டில் 2 வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை முன்னதாகவே ப்ரமோவில் கமல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்.

Jovika

பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் நுழைந்தார். அதன் பிறகு பூர்ணிமா ரவி, ரவீனா தஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிசந்திரா, அக்‌ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா என 18 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர்.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மிகவும் உற்றுநோக்கும் போட்டியாளராக மாறியுள்ளார் ஜோவிகா. இவருக்கு வெளியே இருந்து, வனிதாவும் தன்னால் முடிந்த வரை முட்டு கொடுத்து வருவதால், மற்ற போட்டியாளர்களை விட, ஜோவிகா அதிகம் கவனிக்க படுபவராக உள்ளார்.  எனவே தான் படிப்பு விஷயத்தில் ஜோவிகா மற்றும் விசித்ரா இடையே நடந்த, காரசாரமான விவாதம் அதிகம் கவனிக்கப்பட்டது . கமல்ஹாசன் இதுபற்றி என்ன கருத்து கூறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்டும் படாமல் இந்த விஷயத்தை மேலோட்டமாக பேசி முடித்தார்.


விசித்ரா - ஜோவிகா இடையே படிப்பு குறித்த விவாதம் செல்லும் போது, விசித்ரா எங்க தமிழ் நீ எழுது பார்க்கலாம் என வார்த்தையை விட்டார். அதற்கு ஜோவிகா, எனக்கு அப்பா - அம்மா எழுத தெரியும், தமிழில் கொஞ்சம் படிக்க தெரியும் என கூறினார். ஆனால் ஆங்கிலத்தில் மிகவும் நன்றாக பேசுவேன் என கூறி இருந்தார். 

இதை தொடர்ந்து ஜோவிகாவின் தந்தை தனக்கு அனுப்பிய வீடியோ என கூறி, வனிதா விஜயகுமார் தற்போது ஜோவிகா, தமிழில் கவிதை ஒன்றை சரளமாக வாசிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மகளை தமிழ் தெரியாது என அசிங்கப்படுத்தியதும், வனிதாவை தொடர்ந்து, அவரின் தந்தை ஆகாஷும், இப்போது காலத்தில் இறங்கி விட்டாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

From around the web