ஜெயம் ரவி நடிப்பில் வெளியாக உள்ள ‘சைரன்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு!

 
Siren

ஜெயம் ரவி நடித்துள்ள ‘சைரன்’ படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘சைரன்’. குடும்ப அம்சங்களுடன் ஆக்சன் திரில்லராக பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகிபாபு, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Siren

இந்தப் படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜய்குமார் தயாரித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு செல்வகுமார் எஸ்.கே ஒழிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை பெற்றது. 

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரம் மற்றும் வித்தியாசமான கதைகளங்களால் ரசிகர்களை மகிழ்வித்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இந்த படம் நாளை (பிப்ரவரி 16) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், ‘சைரன்’ படத்தின் மூன்றாவது பாடலான 'அடி ஆத்தி' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. முருகன் மந்திரம் எழுதியுள்ள இந்த பாடலை அந்தோணி தாசன், சிந்துரி விஷால், முகேஷ் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

From around the web