ஆர்த்தியின் கஸ்டடியில் இருக்கும் மகன்களை மீட்க போராடும் ஜெயம் ரவி!

 
Jayam Ravi

தன் மகன்கள் பற்றியும் அவர்களை கஸ்டடியில் எடுப்பது பற்றியும் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ஜெயம் ரவி கூறி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. பிரபல தயாரிப்பாளும், திரைக்கதை எழுத்தாளருமான மோகனின் மகன் ஜெயம் ரவி. அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கிய ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகினார். சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம், தீபாவளி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவருடைய நடிப்பில் பிரதர் திரைப்படம் அடுத்து வெளியாகவுள்ளது.

மனைவியை விவாகரத்து செய்வதாக கடந்த சில வாரங்களுக்கு முன் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்ட நிலையில், தனக்கு தெரியாமலேயே ஜெயம் ரவி இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறி ஆர்த்தி குண்டை தூக்கிப் போட்டார். பின்னர் ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷாவுக்கும் இருக்கும் தொடர்பே அவருக்கும் ஆர்த்திக்கும் இடையே விரிசல் ஏற்படுவதற்கு காரணம் என கிசுகிசுக்கப்பட்டது.

Jayam Ravi

இதுகுறித்து மெளனம் காத்து வந்த ஜெயம் ரவி, கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது இந்த சர்ச்சைகள் குறித்து ஓப்பனாக பேசினார். அதன்படி விவாகரத்து முடிவு என்பது ஆர்த்தியின் பெற்றோருடன் கலந்து ஆலோசித்த பின்னர் எடுக்கப்பட்டதாகவும், அது எப்படி ஆர்த்திக்கு தெரியாமல்    இருக்கும் என கேள்வி எழுப்பிய அவர், கெனிஷா உடன் தன்னை தொடர்பு படுத்தி பேசுவது தவறானது என கூறினார்.

கெனிஷா ஒரு பாடகி மட்டுமின்றி ஒரு மனநல ஆலோசகர் என்றும் கூறிய அவர், மன அழுத்தத்தில் இருந்த பலரை அவர் மீட்டெடுத்து உள்ளதாக ஜெயம் ரவி கூறினார். மேலும் கெனிஷா உடன் சேர்ந்து தான் ஒரு ஆன்மிக மையம் ஒன்றை திறக்க உள்ளதாகவும் கூறிய அவர், வாழு வாழவிடு என்றும் கேட்டுக்கொண்டார். அவரின் இந்த பேட்டி இணையத்தில் படு வைரல் ஆனது.

Jayam Ravi

இந்த நிலையில், தன் மகன்கள் பற்றியும் அவர்களை கஸ்டடியில் எடுப்பது பற்றியும் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ஜெயம் ரவி கூறி இருக்கிறார். அவர் கூறியதாவது, என்னுடைய எதிர்காலமே எனது மகன்கள் ஆரவ் மற்றும் அயான் தான். அவர்களை என்னுடைய கஸ்டடியில் எடுக்க போராடுவேன். விவாகரத்துக்காக 10 ஆண்டுகள் என்ன 20 ஆண்டுகள் கூட கோர்ட்டில் போராட தயாராக இருக்கிறேன். எனது சந்தோஷமே என்னுடைய மகன்கள் தான். என்னுடைய மகனை வைத்து நான் படம் தயாரிக்கவும் திட்டமிட்டு இருந்தேன். அது என்னுடைய கனவு என்றும் ஜெயம் ரவி தெரிவித்தார்.

ஆர்த்தி உங்களுடன் சமரசம் செய்ய விரும்புகிறாரா என்கிற கேள்விக்கு பதிலளித்த ஜெயம் ரவி, அவரிடம் சமரசம் செய்யும் எண்ணம் இருந்தால் ஏன் காதலி பற்றி பரப்ப வேண்டும். இந்த விவாகரத்தில் கெனிஷாவுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என ஜெயம் ரவி ஓப்பனாகவே கூறி இருக்கிறார். இதன்மூலம் விவாகரத்தை தாண்டி ஆர்த்தி, ஜெயம் ரவி இருவரும் மகன்களுக்காக கோர்ட்டில் போராட உள்ளார்கள் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

From around the web