‘ஜவான்’ பட ரிலீஸ் தேதி மாற்றம்.. வீடியோ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த அட்லி!!

 
Jawan

ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜவான்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அட்லி இயக்கத்தில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் விஜய் சேதுபதி, சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ரெட் சில்லீஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. 

Jawan

இந்தப் படம் முதலில் ஜூன் 2-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வெளியீட்டுக்கு ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் இந்தப் படத்தின் டீசர், டிரெய்லர் என எதுவும் வெளியாகாததால் ஜவான் சொன்ன தேதியில் வெளியாகுமா என ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.

இந்த நிலையில் இந்தப் படம் வருகிற செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் இந்தி மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு மொழியில் வெளியாகிறது. இந்தப் படத்துக்காக அட்லி முதன்முறையாக அனிருத்துடன இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


இந்தப் படம் பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல் நடித்த ஒரு கைதியின் டைரி பட இன்ஸ்பிரேஷனில் உருவாகியுள்ளதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web