ஜப்பானின் ஒசாகா திரைப்பட விழா... நடிகர் விஜய்க்கு விருது அறிவிப்பு!!

 
Vijay

ஜப்பானின் ஒசாகா திரைப்பட விழாவில் நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டில் தமிழ் திரைப்படங்களை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. தமிழில் வெளியாகும் படங்களுக்கு சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்கம், சிறந்த படம் உள்ளிட்ட பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

Osaka

அந்த வகையில், கடந்த 2021-ம் ஆண்டு தமிழில் வெளியான படங்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சிறந்த படமாக ‘சார்பட்டா பரம்பரை’ அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாஸ்டர் படத்தில் நடித்த விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருதும், தலைவி படத்தில் நடித்த கங்கனா ரனாவத்க்கு சிறந்த நடிகைக்கான விருதும், சிறந்த திரைக்கதை பிரிவில் மாநாடு படத்திற்காக இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மாநாடு படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது யுவன் சங்கர் ராஜாவுக்கும், கர்ணன் படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவு பிரிவில் தேனி ஈஸ்வர், சிறந்த நடன அமைப்பு பிரிவில், மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்காக தினேஷ் குமார், சிறந்த துணை நடிகர் ஜெய்பீம் மணிகண்டனுக்கும் வழங்கப்பட உள்ளது. 


மேலும், சிறந்த துணை நடிகை ஜெய்பீம் லிஜோமோல் ஜோஸ், சிறந்த நகைச்சுவை டாக்டர் படத்திற்காக நடிகர் ரெட்டின் கிங்ஸ்லே,சிறந்த படத்தொகுப்பு மாநாடு படத்திற்காக பிரவீன் கே.எல். மற்றும் சிறப்பு விருது யோகிபாபுவின் மண்டேலா படத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web