லியோக்கு போட்டியாக ஜப்பான்.. கார்த்தியின் பட ரிலீஸ் எப்போது? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 
Japan

நடிகர் கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்’ படத்தின் கதாபாத்திர அறிமுக டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘குக்கூ’, ‘ஜோக்கர்’, ‘ஜிப்ஸி’ ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகன் தற்போது இயக்கி வரும் படன் ‘ஜப்பான்’. கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனு இமானுவேல் நாயகியாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் ஆகியோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் கார்த்தியின் 25வது படமாகும். இந்த திரைப்படத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Japan

உண்மை சம்பவத்தை எடுத்துக்கொண்டு புனைவு திரைக்கதை மூலமாக ஜப்பான் திரைப்படத்தை ராஜூ முருகன் எடுத்து வருகிறார். அதுவும் திருச்சியில் நடந்த ஒரு சம்பவத்தை கதையின் அடிநாதமாக்கி உள்ளார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜூன் 3ம் தேதி தொடங்குகிறது. அந்த படப்பிடிப்பு 20 நாட்கள் நடைபெறும் என்றும், அத்துடன் படத்தின் படப்பிடிப்பு வேலைகளும் முடிவடையும் எனவும் பட குழு தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் கார்த்தியின்  ஜப்பான் திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என அறிவித்திருக்கின்றனர். கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அன்று சர்தார் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியில் பெரும் வெற்றி அடைந்தது. 

இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கும் கார்த்தி நடிப்பில் புதிய திரைப்படம் வெளியாகிறது.  தீபாவளி பண்டிகைக்கு பெரும்பாலும் விஜய் அல்லது அஜித் படங்கள் வெளியாகி வந்தன ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கார்த்தி நடிக்கும் திரைப்படங்கள் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் திரைப்படத்தை முதலில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டது. ஆனால் தற்போது தீபாவளி பண்டிகைக்கு வெளியிடுவதாக அறிவித்திருக்கின்றனர்.

From around the web