மருத்துவர் கண்காணிப்பில் உள்ளாரா விஷால்?
ம்தகஜராஜா பட வெளியீட்டுக்கான சிறப்பு நிகழ்ச்சியில் விஷால், விஜய் ஆண்டனி, சுந்தர் சி ஆகியோர் பங்கேற்றனர். தன்னுடைய மிகவும் நல்ல நண்பர் குஷ்பு என்று கூறினார் விஷால். மேலும் விஜய் ஆண்டனியை கல்லூரி காலத்திலேயே தெரியும். அவர் ராஜா என்று தான் எனக்குத் தெரியும். அப்படியே அழைப்பேன். கல்லூரியில் படிக்கும் போது பாடல்களுக்கு இசை அமைப்பார்.இந்தப் படத்தில் என்னையும் பாட வைத்துள்ளார். இந்தப் பாடலுக்காக எனக்கு விருது நிச்சயம் கிடைக்கும் என்று சொன்னார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷால் முதலில் நின்று கொண்டு பேசினார். கை நடுங்கியது, வாய் குளறியது. இதைக் கவனித்த நெறியாளர் டிடி , உக்காந்து கலந்துரையாடலாக நடத்துவோம் என்று சுந்தர் சி ஐயும் விஜய் ஆண்டனியையும் அழைத்தார். பின்னர் குஷ்புவும் இவர்களுடன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி முழுவதும் பேசும் போது மிகவும் சோர்வாகவும், கை நடுக்கத்துடனே இருந்தார். முன்னர் போல் பேசவும் அவரால் முடியவில்லை.கை நடுக்கம் வாய் குளறல் பிரச்சனை பார்க்கின்ஸன், திடீர் அழுத்தம், சில மருந்துகளின் பக்க விளைவுகள், மரபணு தொடர்ச்சியால் வரும் பிரச்சனை என ஏதாவது ஒரு காரணத்தால் வரக்கூடும். மருத்துவ சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும், வ்ஷால் மருத்துவர் பராமரிப்பில் இருப்பதாகத் தெரிகிறது. விரைவில் முழுமையாக நலம் பெற்ற ஆக்ஷன் ஹீரோவாக வாருங்கள் விஷால்!