வெற்றிமாறனுக்கும் சீமானுக்கும் பிரச்சனையா?

 
வெற்றிமாறன்

விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை பாகம் 2 படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வணிகரீதியாகவும் இந்தப்படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

விடுதலை படத்தின் சிறப்புக் காட்சிகளை தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள், இயக்கத் தலைவர்கள் என முக்கியமானவர்களுக்கு திரையிட்டுக் காட்டியுள்ளார் வெற்றிமாறன்.மே17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, கொங்கு இளைஞர் பேரவை தனியரசு, தமிழ்ப் புலிகள் கட்சியின் நாகை திருவள்ளுவன், தமிழர் விடியல் கட்சி இளமாறன், எம்ஜிஆர் திரைப்படக்கல்லூரி முதல்வர் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது என பலருக்கும் இந்த சிறப்புக் காட்சியை திரையிட்டுள்ளார் வெற்றிமாறன்.

இவர்களுடன் தானும் விடுதலை 2 படத்தை பார்க்க வேண்டும் என்று சீமான் விரும்பியுள்ளார்.நெருக்கமான தயாரிப்பாளர்கள் மூலமாகவும் முயற்சி செய்துள்ள போதிலும் சீமானுக்கு விடுதலை 2 படத்தை வெற்றிமாறன் போட்டுக்காட்டவில்லை.  இருவருக்கும் ஏதோ பிரச்சனை உள்ளதா? அல்லது விடுதலை 2 படத்திற்கு சீமான் கருத்து சொல்வது வெற்றிமாறனுக்குப் பிடிக்கவில்லையா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

From around the web