ஆஷிகா ரங்கநாத்-ஐ மிஸ் பண்ணுகிறாரா சித்தார்த்?
Dec 3, 2024, 20:32 IST
மாப்ள சிங்கம், களத்தில் சந்திப்போம் படங்களைத் தொடர்ந்து என்.ராஜசேகர் இயக்கும் படம் மிஸ் யூ. இதில் சித்தார்த் நாயகனாகவும் ஆஷிகா ரங்கநாத் நாயகியாகவும் நடிக்கின்றனர்.
மேலும் பாலசரவணன், கருணாகரன், சாஸ்திகா, லொல்லுசபா மாறன் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். கே.ஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் பொன்ராஜ் எடிட் செய்துள்ளார். 7 மைல்ச் பெர் செக்கண்ட் நிறுவனத்தின் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரித்துள்ள இந்தப் படம் டிசம்பர் 13ம் தேதி திரைக்கு வருகிறது.