இரட்டை வேடம் போடுகிறாரா பா.ரஞ்சித்?

 
பா ரஞ்சித்

சென்னை உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி விற்பனை செய்யவில்லை என்று ரஞ்சித் அவர்களின் நீலம் பண்பாட்டு மையம் Neelam.Culture முதலில் குற்றச்சாட்டு வைத்தது.. அந்த குற்றச்சாட்டு தவறு என்று உணவுத்திருவிழா நடத்திய நிர்வாகமும் சமூக வளைதலங்களில் பலரும் கடை எண் 17ல் மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுகிறது என்று எடுத்துக் காட்டியவுடன் பீப் சுக்கா மட்டுமே இருக்கிறது என்று அந்தர்பல்டி அடித்து அடுத்த குற்றச்சாட்டை வைத்திருக்கிறது.

இவர்களின் நோக்கம் மாட்டிறைச்சி கிடையாது.. இதை வைத்து திமுக அரசு மீது குறை சொல்வது. மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களையும் அதன் ஆதரவாளர்களையும் திமுக ஆட்சிக்கு எதிராக திருப்புவது. இதுதான் P ரஞ்சித் மற்றும் அவரின் ஆதரவாளர்களின் முக்கிய நோக்கம். இதேபோல தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் நடந்தது. அரசியல் ரீதியாக ஆம்ஸ்ட்ராங் திமுகவிற்கு threat என்பதை போலவும், அவரால் திமுக வாக்கு வங்கி பெருமளவில் பாதிக்கப்படும் என்பதை போலவும்.. அதனால் அவரை கொலை செய்ய திமுகவே திட்டம் தீட்டி கொன்றொழித்தது போலவும் ரஞ்சித் மற்றும் அவரின் ஆதரவாளர்களால் ஒரு நரேட்டிவ் செய்யப்பட்டு திமுகவை தலித்துகளுக்கு எதிரான ஒரு இயக்கம் என்பதை போல தலித்துகளிடம் எடுத்து சென்றார்கள்.. திமுகவிற்கு எதிராக மிக ஆவேசமாக ட்வீட் போட்டு பல கூட்டங்களை நடந்த்தினார் ரஞ்சித்.

ஆனால் நடந்தது என்ன? கொலை செய்த குற்றவாளிகளில் பலர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு மிக நெருக்கமானவர்கள். அதே சமூகத்தை சார்ந்தவர்கள். கட்டபஞ்சாயத்து, நிலத் தகராறு, ரியல் எஸ்டேட், கந்துவட்டி, ஸ்க்ராப் பிசினஸ், பார் கவுன்சில் தேர்தல் என பல காரணங்கள் இருந்ததை தமிழ்நாடு காவல்துறை விசாரணையில் கண்டறிந்து அதை குற்றப்பத்திரிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு ரஞ்சித் & கோ அவர்களின் சத்தம் ஆம்ஸ்ட்ராங் கொலை பற்றி காணாமல் போனது. இதோ போன வாரம் ஒன்றிய பாஜக அரசின் அமைச்சர் அமித்ஷா புரட்சியாளர் அம்பேத்கரை மிக கொச்சையாக கீழ்த்தரமாக விமர்சித்திருக்கிறார். நாடு முழுவதும் அமித்ஷாவிற்கு மிக கொந்தளிப்புடன் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் திமுக விசிக காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் மிக கடுமையாக போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் நொடிக்கு ஒருமுறை ஜெய்பீம்.. ஜெய்பீம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் ரஞ்சித் இதைப்பற்றி குறைந்தபட்சம் ஒரு ட்வீட் கூட போட்டு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.. ஒரு திரைப்பட ப்ரோமோசனில் ஒரு நிருபர் கேட்டதற்கு ஒரே வார்த்தையில் அது தவறு என்று சொல்லி நகர்ந்துவிட்டார்..இதே திமுகவில் அப்படி ஒரு விஷயம் நடத்திருந்தால் ரஞ்சித் தினமும் ஒரு பத்து ட்வீட் போட்டு, தினமும் செய்தியாளர்களை சந்தித்து திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்திருப்பார்.. திமுகவிற்கு எதிராக தலித் தலைவர்களை அழைத்து பெரிய போராட்டமே நடத்தி இருப்பார்.

ஆனால் அண்ணலை அவமத்தித்தது அமித்ஷா என்பதால் அமைதியாக கடந்து சொல்கிறார். அதும் அமித்ஷா அம்பேத்கரை பற்றி பேசிய விஷயம் மிக கேவலமானது.. அசிங்கமானது. ஆனால் அதையே அமைதியாக கடந்து செல்கிறார் என்றால் இவரின் எஜமானர் யார் என்று புரிந்து கொள்ள முடிகிறது. இப்படிதான் இந்த மாட்டிறைச்சி பிரச்சனையும். முதலில் மாட்டிறைச்சி இல்லையென்றார். இருக்கு என்று தெரிந்தவுடன் ஓரிரு ஐட்டம் மட்டும்தானா என்கிறார்.. நிறைய வெரைட்டி போட்டால், அதை மட்டுமே செய்திருக்க வேண்டும், எதற்கு கோழி, ஆடு, மீன் என்பார்.. இவரின் இரட்டை வேடத்தை சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது. ரஞ்சித் ஆர்.எஸ்.எஸ்ஸின் கைக்கூலி என்றால் மிகையல்ல!
 

- விமலாதித்தன் மணி

From around the web