தனுஷ் ஒரு மனுஷனா? டார் டாராக கிழித்த பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன்

 
Dhanush - Aishwarya

நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் போலி வாழ்க்கை வாழ்ந்து வருவதாக பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

2002-ல் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் தனுஷ். இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும் இயக்குநர் செல்வராகவனின் தம்பியுமான இவர், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் 2004-ம் ஆண்டு மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. 18 ஆண்டுகள் மனம் ஒத்த தம்பதிகளாக இருந்த இவர்கள், 2022-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி இன்ஸ்டாகிராமில் ஒரு அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர். 

தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடியின் இந்த அறிவிப்பு அவர்களது குடும்பத்தினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும் பொருட்டு இருவீட்டாரும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்ததால் இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள்.

Dhanush-Aishwarya

விவாகரத்து அறிவிப்புக்கு பின்னரும் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் படம் வரும் போது ஒருவருக்கொருவர் வாழ்த்திக் கொள்வது மட்டுமின்றி தங்களது மகன்களின் பள்ளி விழாவிலும் ஒன்றாக கலந்து கொண்டனர். இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், அது போலி வாழ்க்கை என சாடி உள்ளார். சினிமாவில் நடிப்பதை போல் நிஜ வாழ்க்கையிலும் நடித்துக் கொண்டிருக்கும் ஒரே தம்பதி தனுஷும் ஐஸ்வர்யாவும் தான் என வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

தொடர்ந்து பேசிய கே.ராஜன், குடும்பமா அது? தனுஷ் ஒரு மனுஷனா? ஐஸ்வர்யா ஒரு பொம்பளையா? இப்படி கேடு கெட்டத்தனமா நடந்து பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்டார்களே என பலர் பேசும் அளவுக்கு வாழ்லாமா? மகன்களுக்காக இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தான் என்னுடைய வேண்டுகோள் என கூறியுள்ளார்.

Rajan

மேலும் பேசிய அவர், தனுஷ் உனக்கு எதுக்கு பல பெண்களோட வாழ்க்கை, ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் தமிழ் பண்பாடு. நான் நேரடியா எதுவும் சொல்லக்கூடாதுனு நெனச்சேன். ஆனா என் மனசு ஒத்துக்கல. கோர்ட் வரைக்கும் போன பிறகு உங்களை என்ன நாகரீகமா பேசுறது. தமிழ் பண்பாட்டை காப்பாற்ற வேண்டும் என நினைத்தால் தயவு செய்து இருவரும் சேர்ந்து வாழுங்கள் என பேசி இருக்கிறார்.

From around the web